அறிமுக கூட்டமே ரத்தா? அபசகுணமாச்சே.... அமமுக நிர்வாகிகள் புலம்பல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அறிமுக கூட்டமே ரத்தா? அபசகுணமாச்சே.... அமமுக நிர்வாகிகள் புலம்பல்

அறந்தாங்கி: அறந்தாங்கியில் நேற்றிரவு நடைபெற இருந்த அமமுக வேட்பாளரின் முதல்  அறிமுக கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளராக வ. து. ந. ஆனந்த் போட்டியிடுகிறார்.

அமமுக வேட்பாளர் ஆனந்த் ராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதி வாரியாக  அறிமுக கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று அறந்தாங்கியில் நடைபெறுவதாக இருந்தது.



கூட்டத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் திடீரென கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் திருச்சிக்கு வந்ததால், அவரை சந்திக்க மாவட்ட நிர்வாகிகள் செல்ல வேண்டி இருந்ததால் கூட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் கூட்டத்திற்கு புறப்பட்ட  கட்சியினர் ஏமாற்றம் அடைந்தனர்.

ராமநாதபுரம் தொகுதி அமமுக வேட்பாளர் கலந்து கொள்ளும் முதல் அறிமுக கூட்டமே ரத்து செய்யப்பட்டதால், இது அபசகுணமாக இருக்கிறதே  என  தொண்டர்கள் புலம்பினர்.

.

மூலக்கதை