Gilets jaunes - பொருளாதாரத்தில் தாக்கம்! - சேத விபரங்களை வெளியிட்ட அமைச்சர்!!

PARIS TAMIL  PARIS TAMIL
Gilets jaunes  பொருளாதாரத்தில் தாக்கம்!  சேத விபரங்களை வெளியிட்ட அமைச்சர்!!

இதுவரை இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தினால் ஏற்பட்ட சேத விபரங்களை பொருளாதார அமைச்சர் வெளியிட்டுள்ளார். 
 
நவம்பர் 17 ஆம் திகதியில் இருந்து இதுவரை இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டங்களினால், இதுவரை €200 மில்லியன் யூரோக்கள் செலவானதாக பொருளாதார அமைச்சர் Bruno Le Maire தெரிவித்துள்ளார். இது பிரெஞ்சு பொருளாதாரத்தில் 0.2 வீதம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 
கடந்தவார சனிக்கிழமை பரிசில் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள், திருட்டுச் சம்பவங்கள் அரங்கேறியிருந்தன. அன்றைய ஒரு நாளில் மாத்திரம் €30 மில்லியன் யூரோக்கள் சேதமாகியிருந்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 
 
மஞ்சள் மேலங்கி போராளிகள் நேரடியாகவும் அதேவேளை மிக குறைந்த அளவு தாக்கத்தினை பிரெஞ்சு வளர்ச்சிமீது ஏற்படுத்துகின்றனர் எனவும் Bruno Le Maire நேற்று புதன்கிழமை தெரிவித்திருந்தார். 
 
 
 
.

மூலக்கதை