ரொம்ப கொடுமையான விடயம் அது தான்! தோனி வேதனை

PARIS TAMIL  PARIS TAMIL
ரொம்ப கொடுமையான விடயம் அது தான்! தோனி வேதனை

சூதாட்ட புகாரில் சென்னை அணிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து தோனி மனம் திறந்து பேசியுள்ளார்.
 
சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2016, 2017 ஆகிய இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டதால் அதனுடைய ஆயிரக்கணக்கான ரசிகர்களை வருத்தம் அடைந்தனர். இரண்டு ஆண்டுகள் தங்களுடைய மஞ்சள் நிறைய ஆடை  அணிந்த வீரர்களை பார்க்க முடியாமல் அவர்கள் ஏங்கிப் போனார்கள்.
 
புனே, குஜராத் அணிகளில் தங்கள் வீரர்கள் விளையாடினாலும் ரசிகர்கள் திருப்தி அடையவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கடந்த ஆண்டு களத்தில் இறங்கிய சிஎஸ்கே அணி, அதிரடியாக விளையாடி கோப்பையை கைப்பற்றியது. இத்தகைய நிலையில், இந்த ஆண்டும் சிஎஸ்கே அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டிக்கெட் விற்பனைக்கு கூடிய கூட்டத்தை பார்த்திருந்தாலே தெரிந்திருக்கும்.
 
 
இந்நிலையில், ஐபிஎல் 2019 தொடர்பாக ரோர் ஆஃப் லையன் என்ற டாக்குமெண்டரியை ஹாட்ஸ் ஸ்டார் வெளியிட்டுள்ளது. அதில், ஐபிஎல் தொடரில் தனக்கு நேர்ந்த அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார். குறிப்பாக, சூதாட்ட புகார் குறித்து உணர்வுபூர்வமாக பேசியுள்ளார்.
 
சூதாட்ட புகார் குறித்து தோனி பேசியது:-
 
“என்னுடைய வாழ்க்கையில் 2013ம் ஆண்டு மிகவும் கடினமானது. அதுவரை அப்படி ஒரு மன அழுத்தத்தை நான் அனுபவித்ததில்லை. 2007 உலகக்கோப்பையில் நம்முடைய அணி லீக் போட்டியிலேயே வெளியேறியது. அப்பொழுதும் எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனால், நாங்கள் நன்றாக விளையாடவில்லை என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். ஆனால், 2013ம் ஆண்டு சர்ச்சை மிகவும் வித்தியாசமானது. அப்போது, மக்கள் கிரிக்கெட் சூதாட்டத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அதுதான் நாட்டில் பெரிய பேச்சாக இருந்தது.
 
முதலில் குருநாத்தின் பெயர் அடிபட்டது. அவர் எங்கள் அணியைச் சேர்ந்தவர். அவர் அணியின் உரிமையாளரா?, தலைவரா?, ஆலோசகரா? உண்மையில் அவர் யார்? ஆனால், அவரை சீனிவாசனின் மருமகனாகத்தான் எங்களுக்கு தெரியும்.
 
நீங்கள் எப்படி இப்படி செய்தீர்கள் என்று என்னிடம் யாரும் கேட்கவில்லை. எனக்கும் இதுகுறித்து மற்றவர்களிடம் பேச பிடிக்கவில்லை. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை பாதிக்கும் எதனையும் நான் விரும்பவில்லை. என்னைப் பொருத்தமட்டில் கிரிக்கெட்தான் மிகவும் முக்கியமான ஒன்று
 

மூலக்கதை