ரயில் பயணிகள் தாங்கள் ஏறும் நிலையத்தை 4 மணி நேரத்திற்கு முன் மாற்றிக் கொள்ளும் வசதி மே1-ந் தேதிக்குள் வருகிறது!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
ரயில் பயணிகள் தாங்கள் ஏறும் நிலையத்தை 4 மணி நேரத்திற்கு முன் மாற்றிக் கொள்ளும் வசதி மே1ந் தேதிக்குள் வருகிறது!

ரயில் பயணிகள் தாங்கள் ஏறும் நிலையத்தை 4 மணி நேரத்திற்கு முன் மாற்றிக் கொள்ளும் வசதி மே 1-ந் தேதிக்குள் நடைமுறைக்கு வருகிறது.

ரயில் பயணிகளுக்கு தேவையான பல்வேறு வசதிகளை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், விரைவு ரயிலில் பயணம் செய்ய, டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் ரயில் புறப்படும் 4 மணி நேரத்துக்கு முன்பு ஏறும் இடத்தை மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவித்து உள்ளது. 

அதாவது ரயிலில் சார்ட் தயாரிப்பதற்கு முன்பே தாங்கள் ரயிலில் ஏறும் ரயில் நிலையத்தை மாற்றிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தித்தர முடிவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது. இந்த வசதி தத்கல் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டு உள்ளது. 

சில தவிர்க்க முடியாத தருணங்களில் பயணிகள் தாங்கள் புறப்பட வேண்டிய ரயில் நிலையத்தில் ரயிலை பிடிக்க முடியாமல் போகும் போது இந்த வசதி அவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

பயணிகள் ரயில் புறப்பட 4 மணி நேரத்துக்கு முன்பு 139 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தங்களது ரயில் எண் மற்றும் மாற்ற வேண்டிய ரயில் நிலையத்தின் தகவல்களை அளிக்க வேண்டும்.

ஒருவேளை மாற்றிய ரயில் நிலையத்தில் இல்லாமல், அவர் முன்பு பதிவு செய்த ரயில் நிலையத்தில் இருந்தும் எந்தக் கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம் என்றும், அவரது இருக்கை வேறு யாருக்கும் மாற்றி வழங்கப்படாது என்றும் ரயில்வே நிர்வாகம் தகவல் அளித்து உள்ளது. 

மே 1ம் தேதிக்குள் இந்த புதிய வசதி நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஏற்ற வகையில் ஐஆர்சிடிசி இணையதளத்தை மாற்றி அமைக்குமாறு தொழில்நுட்ப நிபுணர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது பயணிகள் தான் ரயிலில் ஏறுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவோ அல்லது ரயில் நிலையத்துக்கு நேரில் சென்று மாற்ற விரும்பும் ரயில் நிலையங்களின் பெயரை எழுதிக் கொடுத்துத்தான் மாற்ற முடியும் என நடைமுறை உள்ளது குறிப்பிடத் மக்கது. இதனால் இந்த புதிய நடைமுறைக்கு ரயில் பயணிகள் இடையே வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை