சுங்கச்சாவடி இல்லாமல் வாகன வரி! - பிரான்சில் முதன்முறையாக அறிமுகம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
சுங்கச்சாவடி இல்லாமல் வாகன வரி!  பிரான்சில் முதன்முறையாக அறிமுகம்!!

சுங்கச்சாவடிகளில் வாகனத்தை நிறுத்தி பணத்தினைச் செலுத்தும் முறையை மாற்றி தற்போது தானியங்கி முறை ஒன்றை முதன் முதலாக பிரான்சில் அறிமுகப்படுத்தியுள்ளனர். 
 
இந்த வசதி முதன் முறையாக Lorraine நகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Metz நகரில் இருந்து Strasbourg நகரை இணைக்கும் A4 நெடுஞ்சாலையில் Lorraine நகரில் உள்ள சுங்கச்சாவடி அகற்றப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை மார்ச் 20 ஆம் திகதி, புத்தம் புதிய நவீன வசதிகளுடன் கூடிய இந்த புதிய தொழில்நுட்பம் திறந்து வைக்கப்பட்டது. உங்களது வாகனங்கள் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, இங்குள்ள கண்காணிப்பு கமராக்கள் தானியங்கி முறையில் உங்களது இலக்கத்தகடுகளை பதிவு செய்து, உங்களது பெயர் முகவரியினை தெரிந்துகொண்டு, உங்களுக்கு உங்களது சுக்கச்சாவடிக்கான கட்டண பட்டியலை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். நீங்கள் இணையம் மூலம் பணம் செலுத்தலாம். 
இதன் மூலம் பாரிய வாகன நெரிசலையும், நேரத்தினையும் மிச்சப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோடை விடுமுறை காலங்களின் போது இது பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை