பரிசில் வன்முறை! - பிரதமரின் சுற்றுப்பயணம் இரத்து!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிசில் வன்முறை!  பிரதமரின் சுற்றுப்பயணம் இரத்து!!

கடந்த சனிக்கிழமை பரிசில் இடம்பெற்ற வன்முறை வெறியாட்டத்தின் பாதிப்பு இன்னமும் அடங்கியபாடில்லை. தற்போது பிரதமரின் சுற்றுப்பயணம் ஒன்று இரத்துச் செய்யப்பட்டுள்ளது. 
 
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமருக்கு இடையிலான சந்திப்பில், மஞ்சள் மேலங்கி போராட்டம் தொடர்பான பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தது. தண்டப்பணத்தினை அதிகரித்ததோடு, பரிசில் குறிப்பாக சோம்ப்ஸ்-எலிசேயில் மஞ்சள் மேலங்கி போராட்டத்துக்கு தடையும் விதித்திருந்தனர். அத்தோடு பரிஸ் நகர காவல்துறை தலைமை அதிகாரியும் மாற்றப்பட்டிருந்தார். 
 
இந்நிலையில், இவ்வாரக்கடைசியில் பிரதமர் எத்துவா பிலிப், தென் அமெரிக்க நாடான Guyana வுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த பயணத்தை இரத்துச் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதேபோன்றதொரு சர்ச்சையினால் கடந்த டிசம்பர் மாத ஆரம்பத்தில் போலந்து சுற்றுப்பயணத்தை பிரதமர் இரத்துச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை