அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

சென்னை: அதிமுக எம். எல். ஏ சூலூர் கனகராஜ் மறைவிற்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:சூலூர் தொகுதி அ. தி. மு. க சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் இன்று காலையில் திடீரென்று மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.

அவரின் மறைவுக்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது குடும்பத்தினருக்கும், அ. தி. மு. க தொண்டர்களுக்கும் எனது அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

.

மூலக்கதை