சட்டீஸ்கரில் எல்லா சிட்டிங் எம்.பிக்களுக்கும் கல்தா

தினகரன்  தினகரன்
சட்டீஸ்கரில் எல்லா சிட்டிங் எம்.பிக்களுக்கும் கல்தா

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் 11 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2014ல் நடந்த மக்களவை தேர்தலில் 11ல் 10 இடங்களை பாஜ கைப்பற்றியது. இந்த முறை 11 இடங்களையும் கைப்பற்றியே தீர வேண்டும் என சட்டீஸ்கர் மாநில பாஜவுக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளாராம். சமீபத்தில் பேட்டி அளித்த அமித்ஷா, ‘சட்டீஸ்கர் நமக்கு பெரும் சவாலாக அமைய உள்ள மாநிலம்.  இங்கு ஆட்சியை இழந்ததால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என கூறியிருக்கிறார். இதன் எதிரொலியாக கடந்த முறை ஜெயித்த 10 பேரில் ஒருவருக்கு கூட இந்த முறை சீட் தரப்படவில்லை. மாநில பாஜ பொதுச்செயலாளர் அனில் ஜெயின் கூறுகையில், ‘புதிதாக 11 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். இதன் மூலம் பிரெஷ்ஷான அதிக எனர்ஜியுடன் உள்ள வேட்பாளர்கள் நமக்கு கிடைப்பார்கள்’ என்றார். சட்டீஸ்கர் எம்.பிக்களின் செயல்பாடுகள் குறித்து ரகசியமாக நடத்தப்பட்ட ஆய்வில் நல்ல ரிசல்ட் இல்லையாம். அதனாலேயே 10 எம்.பிக்களுக்கும் கல்தா கொடுத்திருக்கிறது பாஜ.

மூலக்கதை