ஒரு நாளைக்கு 30 ஆயிரம்2018ல் 1 கோடி வேலைவாய்ப்பை பிரதமர் மோடி அழித்துவிட்டார்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
ஒரு நாளைக்கு 30 ஆயிரம்2018ல் 1 கோடி வேலைவாய்ப்பை பிரதமர் மோடி அழித்துவிட்டார்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

இம்பால்: நாட்டில் கடந்த 2018ம் ஆண்டில் ஒரு கோடி வேலைவாய்ப்பை பிரதமர் மோடி அழித்து விட்டார்” என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் மாலை மணிப்பூர் வந்தடைந்தார். தலைநகர் இம்பாலில், மாநில திரைப்பட மேம்பாட்டு சங்கத்தில் மாணவர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார்.  அப்போது பேசிய ராகுல்காந்தி, ‘‘பிரதமர் அலுவலகமானது தற்போது பிரதமரின் விளம்பர அலுவலகமாக மாறிவிட்டது. கலாச்சார ஏகாதிபத்தியத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை கிடையாது. இது நாட்டின் ஒரு பகுதி தான். ஒரு பகுதி நாட்டின் மற்ற பகுதியை ஆட்சி செய்யக்கூடாது. ஒவ்ெவாரு மாநிலத்தின் குரலும் மதிக்கப்படவேண்டும். நரேந்திரமோடி தலைமையிலான அரசின் கீழ் இந்த நிலை கிடையாது. நாட்டின் ஒவ்வொரு பகுதியும் தன்னை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும். ஆர்எஸ்எஸ்-பாஜ சேர்க்கையானது ஒரு யோசனையை தான் செயல்படுத்த விரும்புகின்றன. மற்றவர்கள் யோசனையை நசுக்கிவிடுகின்றன” என்றார்.தொடர்ந்து நேற்று காலை நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது: பிரதமர் மோடி  2 கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்று வாக்கு கொடுத்தார். ஆனால்  நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் என்ற அடிப்படையில் கடந்த 2018ம் ஆண்டில் ஒரு கோடி வேலையை பிரதமர் மோடி  தலைமையிலான அரசு அழித்துவிட்டது. இது அரசின் தகுதியின்மையை காட்டுகின்றது. பாஜ அரசின் உயர்மதிப்பு ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையானது மக்களின் வாழ்க்கையை அழித்துவிட்டது. எப்ேபாதெல்லாம் பிரதமர்  மணிப்பூர் வருகிறாரோ அப்போதெல்லாம் உங்களது கலாசாரத்தை அவர் அவமதிக்கிறார். அவரது கட்சி தலைவர் அமித்ஷா, மணிப்பூர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில்  குடியுரிமை திருத்த மசோதா அமல்படுத்தப்படும் என்கிறார். இதுபோன்றவர்கள் உங்களது கலாசாரத்தின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இந்த மசோதா நிறைவேற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். காங்கிரஸ் கட்சி உங்களது கலாச்சாரத்துக்கு பாதுகாப்பாக இருக்கும். அந்த மசோதா நிறைவேறாது என்றார்.

மூலக்கதை