ஜி.எஸ்.டி., போன்ற அமைப்புகள் தேவை: அருண் ஜெட்லி

தினமலர்  தினமலர்
ஜி.எஸ்.டி., போன்ற அமைப்புகள் தேவை: அருண் ஜெட்லி

புதுடில்லி: ''ஜி.எஸ்.டி., கவுன்சில் போன்ற அமைப்பு, கிராமப்புற வளர்ச்சி, வேளாண், ஆரோக்கிய பராமரிப்பு துறைகள் ஆகியவற்றுக்கும் தேவை,'' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி, 'டுவிட்டரில்' தெரிவித்துள்ளார்.

புதிய இந்தியா:


அதில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய - மாநில அரசு களுக்கு, சரக்கு மற்றும் சேவை வரிகள் தொடர்பான பரிந்துரைகளை வழங்கும், கூட்டாட்சி அமைப்பாக, ஜி.எஸ்.டி., கவுன்சில் உள்ளது. மிகச் சிறந்த இந்த அமைப்பு, 34 கூட்டங்கள் மூலம், ஆயிரக்கணக்கான பிரச்னைகளை விவாதித்து, தீர்வு கண்டுள்ளது. இதன் மூலம், வர்த்தகர்களும், மக்களும் பயன் பெற்று வருகின்றனர். புதிய இந்தியாவை உருவாக்குவதில், இந்த அமைப்பின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது.

கூட்டாட்சி அமைப்பு:


அத்தியாவசிய துறைகளின் வளர்ச்சிக்கு, மத்திய - மாநில அரசுகள் உடனான ஒருங்கிணைப்பு மேலும் வலுப்பெற வேண்டும். அதற்கு, ஜி.எஸ்.டி., கவுன்சில் போன்ற கூட்டாட்சி அமைப்பை, கிராமப்புற மேம்பாடு, வேளாண், ஆரோக்கிய பராமரிப்பு துறைகளிலும் ஏற்படுத்த வேண்டியது அவசியம். இதன் மூலம், ஏழை மக்கள் பெரிதும் பயன் பெறுவர். அரசியல் கட்சி என்ற முறையில், இத்திட்டத்திற்கு, பா.ஜ., ஆதரவளிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை