பழைய கார், பைக் விலை 4 ஆண்டில் கிடுகிடு உயர்வு

தினகரன்  தினகரன்
பழைய கார், பைக் விலை 4 ஆண்டில் கிடுகிடு உயர்வு

புதுடெல்லி: பழைய ஆடம்பர கார்கள், சூப்பர் பைக்குகள் விலை கடந்த ஆண்டு ஆண்டுகளில் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. டூவீலர் தொடங்கி கார்கள் வரை ஆட்டோமொபைல் தயாரிப்புகள் அனைத்தும் விலை அதிகரித்து விட்டது. குறிப்பாக, பாதுகாப்பு அம்சங்களை சேர்ப்பது தொடர்பான விதிமுறைகள், ஸ்டீல் விலை உயர்வு போன்றவற்றால் வாகனங்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் பலர் பழைய வாகனங்கள ்வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக பட்ஜெட் குடும்பங்கள் முதல் முறை பெரும்பாலும் பழைய கார்களைத்தான் வாங்குகின்றனர் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிறிய ரக கார்களில் பழைய கார் விற்பனையிலும் மாருதி ஸ்விப்ட் முன்னிலையில் உள்ளது. இதுபோல் டூவீலர்களி–்ல் பஜாஜ் பல்சர், ஸ்பிளண்டர் பிளஸ் ஆகியவற்றுக்கும், சூப்பர் பைக்குகளி–்ல் கேடிஎம், ஸ்டீரீட் 750 ஆகியவை முன்னணியில் உள்ளன. பழைய கார்களின் சராசரி விலை 2015ம் ஆண்டு சுமார் ரூ.4.3 லட்சமாக இருந்தது. 2018ல் இது ரூ.6.5 லட்சமாக அதிகரித்துள்ளது. பழைய பைக்ககள் விலை 2015ல் ரூ.49,000 ஆகவும், தற்போது ரூ.54,000 ஆகவும் உள்ளது. சூப்பர் பைக்குகள் 4 ஆண்டு முன்பு ரூ.4.1 லட்சத்துக்கு விற்கப்பட்டன. இவை தற்போது ரூ.4.75 லட்சமாக உள்ளன. அதாவது, கடந்த 4 ஆண்டுகளில் பைக்குகள் விலை ரூ.5,000, கார்கள் விலை ரூ.2.23 லட்சம் உயர்ந்துள்ளது. இதுபோல் சொகுசு கார்களின ்விலை ரூ.9 லட்சம் வரை உயர்ந்துள்ளதாக பழைய கார் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு 7 முதல் 8 ஆண்டுகளிலும் பயணிகள் வாகனங்களின் விலை ரூ.60,000 முதல் ரூ.80,000 வரை உயர்ந்து விடுகிறது. முதல்முறை கார் வாங்குவோர் கூட பழைய கார்களில் உயர்ரக மாடல் வசதிகளை எதிர்பார்க்கின்றனர். அதாவது, ஏசி, பவர் ஸ்டியரிங், பவர் விண்டோ ஆகியவைதான் அவர்களின் அடிப்படை வசதியாக இருக்கின்றன. இதற்கேற்ப விலையும் உயர்ந்து வருகிறது. பெட்ரோல் கார்களை விட டீசல் கார்களுக்கே வரவேற்பு அதிகம் உள்ளது. ஆண்டு முழுவதும் கணக்கிட்டால் எரிபொருள் செலவு குறையும் என வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். இந்திய தயாரிப்புகள் 34%, ஜ்பான் தயாரிப்புகள் 21 சதவீதம், தென்கொரிய தயாரிப்புவாகனங்கள் 17 சதவீதம் விற்பனையாகின்றன. இதுபோல் 75 சதவீத வாடிக்கையாளர்கள் கியர் வாகனங்களையும், 25 சதவீதம் பேர் ஆட்டோ கியர் வாகனங்களையும் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர் என கார் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை