உங்களுக்கு தைரியம் இருந்தால் எங்க பொருட்களை நிறுத்தி தான் பாருங்களேன்...! இந்தியாவுக்கு சீனா மிரட்டல்

தினகரன்  தினகரன்
உங்களுக்கு தைரியம் இருந்தால் எங்க பொருட்களை நிறுத்தி தான் பாருங்களேன்...! இந்தியாவுக்கு சீனா மிரட்டல்

பிஜீங்: ‘எதற்கெடுத்தாலும், எங்களுக்கு எதிர்ப்பு காட்ட, சீன பொருட்களை நிறுத்தி விடுவோம்; சீன பொருட்களை வாங்க மாட்டோம்’ என்று சுலபமாக சொல்லி விடுகிறீர்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் அதற்கான முயற்சி கூட எடுக்கமாட்டேங்கறீங்க. நிறுத்தி தான் பாருங்களேன்’ - இப்படி பகிரங்கமாக இந்தியாவுக்கு சீனா மிரட்டல் விடுத்துள்ளது. இந்தியா - சீனா இடையே எல்லைப்பிரச்னை இருப்பது தெரிந்தது தான்.  அவ்வப்போது, வடகிழக்கு மாநிலங்களில் சீனா மூக்கை நுழைக்கும்; இந்தியா கண்டனம் தெரிவித்து, பேசித்தீர்க்கும். சமீபத்தில் பாகிஸ்தானுக்கு சீனா உதவ துவங்கியுள்ளது. ராணுவ, பொருளாதார ஒப்பந்தங்களை செய்கிறது. பாகிஸ்தான் எல்லையில் சாலை போக்குவரத்து வசதி செய்து தருகிறது. தீவிரவாதத்தை பாகிஸ்தான் வளர்ப்பதை கண்டித்த இந்தியா, இந்த விஷயத்தில் சீனா ஒத்துழைக்க வேண்டும் என்று கூறி வந்துள்ளது.  ஆனால், இதுவரை சீனா பயங்கரவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்ததே இல்லை. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தலைவன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தீர்மானம் கொண்டு வந்தது. அதை சீனா  தனது வீட்டோ அதிகாரத்தை (எந்த ஒரு தீர்மானத்தை ரத்து செய்யும் தனிப்பட்ட உச்சபட்ச அதிகாரம்) பயன்படுத்தி ரத்து செய்தது. இது தொடர்பாக சீனா மீது இந்தியாவுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. சமூக வலைதளங்களில், சீனாவை புறக்கணிப்போம், சீன பொருட்களை வாங்காமல் இருப்போம் என்று ேகாஷம் கிளம்பியது. சீன பொருட்களை புறக்கணியுங்கள் என்ற ஹேஷ்டேக் வலைதளங்களில் பரவி பரபரப்பு ஏற்பட்டது. சீனாவுக்கு இதனால் பெரும் எரிச்சல் ஏற்பட்டது. ஆனால், நேரடியாக இந்தியாவை கண்டிக்காத சீனா தன் அதிகாரப்பூர்வ ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகையில் இந்தியாவை மறைமுகமாக மிரட்டியுள்ளது. இதில் வெளியிட்ட கட்டுரையில் கூறியிருப்பதாவது: எப்போதெல்லாம் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சீனாவுக்கு எதிராக கோஷம் போடுவது வாடிக்கையாகி விட்டது. இதை இந்தியா உடனே நிறுத்த வேண்டும். சீன பொருட்களை புறக்கணியுங்கள் என்று வேறு ஹேஷ்டேக் பிரசாரம் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் இப்படித்தான் சீன ெபாருட்களை புறக்கணிக்க சொல்லி கோஷம் கிளம்புகிறது. நாங்கள் இப்போதும் சொல்கிறோம். சீன பொருட்களை நிறுத்திதான் பாருங்களேன். ஏன் தைரியமில்லை? சீன பொருட்களை நிறுத்தி பார்த்தால் தெரியும். இந்தியாவில் சில்லரை வர்த்தக நிலை. இந்தியாவால் தன் மக்களுக்கு போதுமான அளவுக்கு பொருட்களை முழு அளவில் தயாரிக்க முடியாது. இது தெரிந்தும் அவ்வப்போது புறக்கணிக்கும் வேண்டுகோளை விடுகிறது. இனியாவது இது ேபான்று கோஷங்களை போடுவதை நிறுத்த வேண்டும். இந்தியாவில் போதுமான தயாரிப்பு நிறுவனங்கள், மக்கள் அனைவருக்கும் தேவையான அளவுக்கு பொருட்களை தயாரிக்க முடிவதில்லை. இதை இந்தியா உணர்ந்திருக்கிறது என கூறியுள்ளது.நீங்க ஓட்டு வாங்க நாங்களா கிடைத்தோம்?குளோபல் டைம்ஸ் இதழில் மேலும் கூறியதாவது: சீனாவுடன் இந்தியா உறவு சில ஆண்டாக சீராக இருந்து வருகிறது. வர்த்தக பிரச்னைகளையும் தீர்த்து வருகிறது. ஆனால், தேர்தலை கருத்தில் கொண்டு, ‘சீனாவுடன் பிரச்னை என்று தலைவர்கள் பேசி வருகின்றனர். இது தவறு. இந்தியாவில் தேர்தலில் ஓட்டு வாங்க நாங்களா கிடைத்தோம்?  இப்படி செய்வதால், இரு நாடுகள் இடையே தேவையற்ற சிக்கல் தான்  ஏற்படும். அதனால் இந்த அரசியல் பேச்சை நிறுத்த வேண்டும்.

மூலக்கதை