சத்தீஸ்கரில் தற்போது பா.ஜ.க. எம்பிக்களாக உள்ளவர்களுக்கு சீட் மறுப்பு : புதுமுகங்களை வாய்ப்பு அளிக்கப்படும் என அறிவிப்பு

தினகரன்  தினகரன்
சத்தீஸ்கரில் தற்போது பா.ஜ.க. எம்பிக்களாக உள்ளவர்களுக்கு சீட் மறுப்பு : புதுமுகங்களை வாய்ப்பு அளிக்கப்படும் என அறிவிப்பு

ராய்ப்பூர் : சத்தீஸ்கரில் தற்போது எம்பிக்களாக உள்ள 10 பேருக்கும் மக்களவை தேர்தலில் சீட் வழங்குவதில்லை என பாஜக முடிவு செய்துள்ளது. சத்தீஸ்கரில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பாஜக சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸிடம் தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது குறிப்பிடத்தக்கது. சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 11 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதம் 11, 18,23 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.  இந்நிலையில் சத்தீகரில் தற்போது எம்பிக்களாக உள்ள 10 பேருக்கும் மக்களவை தேர்தலில் சீட் வழங்குவதில்லை என பாஜக முடிவு செய்துள்ளது. புதுமுகங்களை வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் தற்போது எம்பிக்களாக உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்றும் பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த வாரத்தில் மட்டும் 25 பாஜக தலைவர்கள் கட்சித் தாவி உள்ளதால் ஆளும் பாரதிய ஜனதாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பி.எஸ். சங்கமாவின் மகனான கொன்ரட் சங்கமாவின் தேசிய மக்கள் கட்சி மேகாலயாவில் பாரதிய ஜனதாவின் உதவியோடு ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால் திடீர் அரசியல் மாற்றத்தால் அந்த கட்சி பாரதிய ஜனதாவை கைகழுவி விட்டு தனியாக களம் காண முடிவு செய்துள்ளது. மேலும் பாரதிய ஜனதா ஆளும் திரிபுராவிலும் 3 முக்கிய தலைவர்கள் காங்கிரசில் இணைந்துள்ளதால் பாரதிய ஜனதாவுக்கு நெருக்கடி முற்றியுள்ளது.

மூலக்கதை