வீடற்ற பெண்களுக்கு குளியலறை! - பரிசில் திறப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
வீடற்ற பெண்களுக்கு குளியலறை!  பரிசில் திறப்பு!!

பரிசில் வசிக்கும் வீடற்ற (SDF) பெண்களுக்காக சுகாதாரமான குளியலறை ஒன்று பரிசில் திறக்கப்பட்டுள்ளது. 
 
பெண்களுக்கு மட்டுமான இந்த சிறப்பு குளியலறை, பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள rue de Charenton வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. Social SAMU பிரிவினரால் திறக்கப்பட்ட இந்த குளியலறையோடு, இலவச மருத்துவ-உளவியல் சிகிச்சைகளுக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. 
 
பரிஸ் நகர மண்டபம் தெரிவித்துள்ள தகவலின் படி, கடந்த 10 வருடங்களில் பரிசில் வீடற்றவர்களின் எண்ணிக்கை 66 வீதத்தால் அதிகரித்துள்ளது எனவும், இவர்களில் அதிகளவான பெண்கள் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த குளியலறையோடு, பெண்களுக்குத் தேவையான சுகாதாரனமான பொருட்கள், அழகு ஆரோக்கிய பொருட்கள், மாதவிடாய் கால தேவைகள் என பல பொருட்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை