தீவிர உடல் இளைப்பில் சிம்பு

தினமலர்  தினமலர்
தீவிர உடல் இளைப்பில் சிம்பு

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைத்தார் சிம்பு. ஆனால், அதற்கடுத்து வெளிவந்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படம் முன்னாடி அடியெடுத்து வந்த சிம்புவை மீண்டும் பின்னாடி தள்ளிவிட்டது. அந்தப் படத்தில் சிம்புவின் தோற்றம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஒரு நாயகனுக்குரிய உடலமைப்புடன் இல்லாமல், உடன் நடித்த காமெடி நடிகர் ரோபோ சங்கருக்குப் போட்டியாக சிம்புவும் குண்டாக இருந்தார் என விமர்சனங்கள் வந்தன.

அதையடுத்து தன் உடல் எடையைக் குறைக்க சிம்பு லண்டன் சென்றார். அங்கு ஒரு மாதகாலமாக தீவிர உடற்பயிற்சி செய்து, பத்து வருடத்திற்கு முந்தைய தோற்றத்தை சிம்பு கொண்டு வந்துவிட்டார் என்கிறார்கள். நேற்று சிம்புவின் புதிய போட்டோ ஒன்று வைரலாகப் பரவியது. தன்னைப் பற்றி விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் அந்த போட்டோவை சிம்பு தரப்பிலிருந்து வெளியிட்டுள்ளார்கள் என்றும் தெரிவிக்கிறார்கள்.

அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள 'மாநாடு' படத்தில் மிகவும் யூத்தான சிம்புவைப் பார்க்கலாம் என்பது சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்.

மூலக்கதை