Roissy இல் இருந்து Orly வரை மகிழுந்தில் பயணிக்க €189 கள்! - காவல்துறையினர் விசாரணை!!

PARIS TAMIL  PARIS TAMIL
Roissy இல் இருந்து Orly வரை மகிழுந்தில் பயணிக்க €189 கள்!  காவல்துறையினர் விசாரணை!!

இரு சுற்றுலாப்பயணிகள் Roissy இல் இருந்து Orly வரை பயணிக்க வாடகை மகிழுந்துக்கு €189 யூரோக்கள் கட்டணம் அறவிடப்பட்டது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். 
 
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. மெக்ஸிக்கோவைச் சேர்த்ந்த இரு சுற்றுலாப்பயணிகள் VTC வாடகை மகிழுந்து ஒன்றில் ஓர்லி விமான நிலையம் வரை பயணித்துள்ளனர். Roissy இல் இருந்து Orly வரை பயணிக்க வழக்கமாக €70 யூரோக்கள் கட்டணமாக அறவிடப்படும். அதிகபட்சமாக €100 கள் அறவிடப்படுவதும் உண்டு. ஆனால் €189 யூரோக்கள் மிக மிக அதிகம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 
 
தவிர, பயணிகளை குறித்த மகிழுந்து சாரதி முழு தொகையையும் செலுத்தக்கோரி கட்டாயப்படுத்தியுள்ளார். வாடகை மகிழுந்து சேவைகளின் தொழிற்சங்கமாக FO-UNCP இது குறித்து வாடிக்கையாளருக்கு விளக்கமளித்துள்ளது. இருப்பினும் வற்புறுத்தல் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மூலக்கதை