காவலாளிகளை திருடர்களாக சித்தரிப்பது துரதிர்ஷ்டவசமானது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

தினகரன்  தினகரன்
காவலாளிகளை திருடர்களாக சித்தரிப்பது துரதிர்ஷ்டவசமானது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

டெல்லி: காவலாளிகளை திருடர்களாக சித்தரிப்பது துரதிர்ஷ்டவசமானது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடத்தப்பட உள்ளது. முதல்கட்ட தேர்தல் அடுத்த மாதம்  11-ம் தேதி நடக்க உள்ள நிலையில், ஆந்திரா,  சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் சேர்த்து நடத்தப்பட உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40  மக்களவை தொகுதிகளிலும் வரும் ஏப்ரல்  18ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை  நடைபெற உள்ளது. 40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான  வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.இந்நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறனர். இதற்கிடையே, தனது டுவிட்டர் பக்கத்தின் பெயரையும் \'சவுகிதார்\' காவலன் நரேந்திர மோடி என்று மாற்றம் செய்துள்ளார். இதேபோல்  பா.ஜனதா  தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், பாஜகவை சேர்ந்த முதல் அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பாஜக  பிரமுகர்களும் தங்களது டுவிட்டர் கணக்குகளில் தங்களது  பெயர்களுக்கு முன்னால் ‘காவலாளி’ (சவுகிதார்) என்ற அடைமொழியை  இணைத்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, ‘காவலாளி ஒரு திருடன்’என விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக   பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நானும் காவலன்தான்’ என்கிற புதிய பிரசார வீடியோவை வெளியிட்டார்.இந்நிலையில், நானும் ஒரு காவலாளி என்ற அடைமொழியை வீடியோ பிரசாரமாக முன்னெடுத்துச் செல்ல பிரதம்ர் மோடி திட்டமிட்டுள்ளார். அவ்வகையில், முதல்கட்டமாக வரும் 31-ம் தேதி நாடு முழுவதும் உள்ள 500  பகுதிகளில் பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் பொது மக்களிடையே  காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். இதற்கிடையே, நாடு முழுவதும் 25 லட்சம் காவலாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று  ஆடியோ வசதி மூலம் கலந்துரையாடினார். அப்போது, காவலாளிகள் என்பதற்கான விளக்கத்தை உலகம் முழுவதும் உள்ள பல மொழிகளில் அர்த்தம் சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியரும் காவலாளிகளாக மாற வேண்டும்  என விரும்புகின்றார். ஆனால், தவறான நோக்கத்துடன், காவலாளி என்பது குறித்து சிலர் தவறாக பிரசாரம் செய்கின்றனர். அவர்களுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். அவர்களின் வார்த்தைகள் உங்களை  காயப்படுத்தியது எதிர்பாராதது. காவலாளிகள் அனைவருக்கும் முன்மாதிரியாக உள்ளனர். அனைத்துக் கொடுமைகளுக்கு எதிராகவும் இந்தியா போராடி வருகிறது. நமது ராணுவம் குறித்து நாம் பெருமைப்பட வேண்டும் என  தெரிவித்துள்ளார். மேலும், காவலாளிகள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர் என மோடி பாராட்டு தெரிவித்தார். 

மூலக்கதை