திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.4.36 கோடி உண்டியல் காணிக்கை

தினகரன்  தினகரன்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.4.36 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப பணமாகவும், தங்கமாகவும், வெள்ளியாகவும் உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 15 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 625 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 12 அறைகள் நிரம்பி நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் 16 மணி நேரத்துக்கு பின் தரிசனம் செய்தனர். நேற்றுமுன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் ரூ.4.36 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

மூலக்கதை