Yvelines - பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சிக்கிய முன்னாள் நகர முதல்வர்!!

PARIS TAMIL  PARIS TAMIL
Yvelines  பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சிக்கிய முன்னாள் நகர முதல்வர்!!

Yvelines மாவட்டத்தில், முன்னாள் நகர முதல்வர் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சிக்கியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றது. 
 
குறித்த மாவட்டத்தின் Favrieux எனும் சிறு கிராம் ஒன்றின் முன்னாள் நகர முதல்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1989 ஆம் ஆண்டில் இருந்து 2002 ஆம் ஆண்டுக்குள் பல்வேறு சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார். ஆபாச புகைப்படங்களை எடுப்பது, பாலியல் பலாத்காரம் செய்வது என பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதுவரை மூன்று சிறுமிகள் மீது பாலாத்காரம் மேற்கொண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
 
குறித்த அதிகாரியை கடந்தவாரம், ஜோந்தாமினர் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் 8 தொடக்கம் 12 வயதுக்குட்பட்டவர்கள் என அறிய முடிகிறது. கடந்த 1989 ஆம் ஆண்டில் இருந்து 2002 ஆம் ஆண்டுக்குள் இந்த சம்பவங்கள் இடம்பெற்றதால் விசாரணைகளில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் இவரால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபருக்கு தற்போது 80 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை