மகாராஷ்டிராவிலும் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கணக்கு பார்த்தால் பிணக்கு வந்துடும்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகாராஷ்டிராவிலும் சமாஜ்வாதி  பகுஜன் சமாஜ் கணக்கு பார்த்தால் பிணக்கு வந்துடும்

மகாராஷ்டிர மாநிலத்தில் முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி - மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், மொத்தமுள்ள 48 தொகுதிகளிலும் இக்கூட்டணி போட்டியிடுகிறது. முன்னதாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் செல்வாக்கு மிக்க இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட ஒப்பந்தம் செய்திருந்தன.

அது, அம்மாநிலத்தில் ஆளும் பாஜவுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதற்கிடையே பிரியங்கா காந்தி தீவிர பிரசாரம் மேற்கொள்வதால், நாட்டின் அதிக தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் பலமிக்க கட்சிகளாக உள்ள சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சிகள் மகாராஷ்டிர மாநில தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து சமாஜ்வாதி எம்எல்ஏ அபு அஸிம் ஆஸ்மி கூறுகையில், ‘பாஜ மற்றும் காங்கிரசுக்கு மாற்றாக எங்கள் அணி இருக்கும்.

மதச்சார்பின்மை நாட்டில் மறைந்து கொண்டிருக்கிறது. தன்னைக் காவலர் எனக் கூறிக் கொள்பவர்கள் பதவியை பிடிப்பதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் பொய் சொல்வார்கள்.


சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளிடையே மகாராஷ்டிரா மாநிலத்தில் தொகுதிகளை பிரித்துக் கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. எங்கள் கூட்டணியில் வேறெந்த கட்சிகளும் இடம்பெறவில்லை.

எங்களுக்குள் பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்கிறது’ என்றார்.

.

மூலக்கதை