லோக்சபா தேர்தலில் டாக்டர் சீனிவாசன் போட்டி

தினமலர்  தினமலர்
லோக்சபா தேர்தலில் டாக்டர் சீனிவாசன் போட்டி

அக்குபன்ஞ்சர் வைத்தியராக இருந்து சினிமா நடிகர் ஆனவர் சீனிவாசன். தனக்குதானே பவர் ஸ்டார் என்று பட்டம் சூட்டிக் கொண்டு காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். அடிக்கடி பணமோசடி வழக்குகளில் கைதாகி சிறைக்கும் சென்று வருவார். இந்த நிலையில் சீனிவான் வருகிற லோக்சபா தேர்தலில், தென்சென்னை தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

இந்திய குடியரசு கட்சியின் மாநில துணைத் தலைவராக இருக்கிறேன். கடந்த 18 மாதங்களுக்கு முன்பே கட்சியில் இணைந்து விட்டேன். இப்போது அந்தக் கட்சியின் சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடுகிறேன்.

தொகுதி மக்களும், எனது ரசிகர்களும் எனக்கு வாக்களிக்கத் தயாராக இருக்கிறார்கள். நான் வெற்றி பெறுவது உறுதி. என்னிடம் பண பலம், ஆள் பலம் இல்லை. ஆனால் மன பலம், மக்கள் பலம் இருக்கிறது. என்மீது சில குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அதை சட்டப்படி சந்தித்து நான் குற்றமற்றவன் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன். என்றார்.

மூலக்கதை