முதல் படத்திலேயே திருடனாக நடிக்கும் விஜய் சேதுபதி மகன்

தினமலர்  தினமலர்
முதல் படத்திலேயே திருடனாக நடிக்கும் விஜய் சேதுபதி மகன்

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களுக்கு பிறகு இயக்குனர் அருண் குமார், மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் படம் சிந்துபாத். இது ஆக்க்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார்.

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி படம் முழுவதும் வரும் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியும், சூர்யா விஜய் சேதுபதியும் சிறுசிறு திருட்டு வேலைகள் செய்யும் திருடர்களாக நடித்துள்ளனர். சேதுபதி திரைப்படத்தில் நடித்த லிங்கா, இப்படத்தில் தாய்லாந்தை சேர்ந்த வில்லனாக நடித்துள்ளார். அவரைப்போலவே சேதுபதியில் நடித்த விவேக் பிரசன்னா முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தற்போது படப்பிடிப்புகள் முடிந்து படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு துபாயில் நடந்து வருகிறது. தென்காசி, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு எளிய மனிதன் ஒரு எளிய வாழ்வை வாழ இந்த சமூகம் எவ்வளவு பெரிய தடையாக உள்ளது என்பதையும், அதற்கு தீர்க்கமான தீர்வையும் பேசும் படமாக உருவாகியுள்ளது சிந்துபாத்.

மூலக்கதை