'ஆர்ஆர்ஆர்' படத்தில் மேலும் ஹிந்தி நடிகர்கள்

தினமலர்  தினமலர்
ஆர்ஆர்ஆர் படத்தில் மேலும் ஹிந்தி நடிகர்கள்

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா நாயகர்களாக நடிக்கும் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் ஹிந்தி நடிகரான அஜய் தேவகன் முக்கிய கதாபாத்திரத்திலும், ஹிந்தி நடிகையான ஆலியா பட் ஒரு நாயகியாகவும் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் மேலும் சில ஹிந்தி நடிகர்களை நடிக்க வைக்க ராஜமவுலி முடிவெடுத்துள்ளார் என்று தெரிகிறது. சஞ்சய் தத், வருண் தவான் ஆகிய இருவரும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

வட இந்தியாவில் இந்தப் படத்தை ஒரு ஹிந்திப் படம் போலவே காட்ட வேண்டும் என ராஜமவுலி நினைப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், அதிகமான ஹிந்தி முகங்கள் இருந்தாலும் தென்னிந்திய ரசிகர்களை ஈர்க்க முடியாது என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆனாலும், 'பாகுபலி 2' படத்தின் ஹிந்தி வசூல் தென்னிந்திய மொழிகளின் வசூலை விட அதிகம். அதனால், அது பற்றியெல்லாம் ராஜமவுலி அதிகம் யோசிக்க மாட்டார் என்கிறார்கள். மேலும், ஹிந்தி நடிகர்கள் இருந்தால் வெளிநாடுகளிலும் வசூல் இன்னும் அதிகமாகவும் வாய்ப்புள்ளது. இனி, 'ஆர்ஆர்ஆர்' படத்தை தெலுங்குப் படம் என்று அழைப்பதைவிட ஒரு இந்தியப் படம் என்றுதான் அழைக்க வேண்டும் என்றும் ஆர்ஆர்ஆர் குழுவினர் விரும்புகிறார்களாம்.

மூலக்கதை