விஜய் படப்பிடிப்பை பார்க்க சென்ற ரசிகர்கள் மீது தடியடி

தினமலர்  தினமலர்
விஜய் படப்பிடிப்பை பார்க்க சென்ற ரசிகர்கள் மீது தடியடி

சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் வார்ப்பு பகுதியில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 63வது படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த சேதி அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவியதை அடுத்து, நூற்றுக்கணக்கான ரசிகர்கள் விஜய்யை காணும் ஆவலில் அங்கு குவிந்தனர்.

நேற்று முன்தினம் மாலை 4 மணியில் இருந்தே ரசிகர்கள் அந்த பகுதியை நோக்கி படையெடுக்க தொடங்கிவிட்டனர். ஆனால் படப்பிடிப்பில் பிசியாக இருந்த விஜய் அவர்களை சந்திக்கவில்லை. இதையடுத்து ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்ததால் அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதைப்பார்த்த துறைமுகம் காவல் நிலைய போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி கூறினார்கள். ஆனால் ரசிகர்களோ விஜய்யை பார்க்காமல் இங்கிருந்து செல்லமாட்டோம் என்று சொன்னார்கள். இதையடுத்து லேசான தடியடி நடத்தி ரசிகர்களை அப்புறப்படுத்தினர்.

இதனால் நீண்டநேரமாக காத்துக்கிடந்த ரசிகர்கள், விஜய்யை பார்க்க முடியாமல் போலீசாரிடம் அடிவாங்கிக் நகர்ந்தனர்.

மூலக்கதை