மீண்டும் தெலுங்கு படத்தில் மேகா ஆகாஷ்

தினமலர்  தினமலர்
மீண்டும் தெலுங்கு படத்தில் மேகா ஆகாஷ்

பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங் ஆகிய படங்களில் நடித்த மேகா ஆகாஷ், தனஷ் உடன், எனை நோக்கிபாயும் தோட்டாவில் நடித்துள்ளார். இப்படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

இந்தநிலையில் அடுத்தபடியாக தெலுங்கில் தில்ராஜூ தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். தமிழில், ஒரு பக்க கதையில் தான் முதன் முதலாக அறிமுகமானார் மேகா ஆகாஷ். ஆனால் அந்த படம் திரைக்கு வராத நிலையில், அதன்பிறகு அவர் தெலுங்கிற்கு சென்று நடித்தார். அந்த வகையில், அவரை முதலில் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தது தெலுங்கு சினிமாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை