சமந்தாவை மூன்றாம் இடத்துக்கு தள்ளிய அதிதிராவ்

தினமலர்  தினமலர்
சமந்தாவை மூன்றாம் இடத்துக்கு தள்ளிய அதிதிராவ்

மணிரத்னத்தின் காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் படங்களைத் தொடர்ந்து, தற்போது சைக்கோ படத்தில் நடித்து வருகிறார் அதிதிராவ். இவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த இரண்டு படங்களுமே தெலுங்கிலும் வெளியானது. அதோடு, கடந்த ஆண்டில் சம்மோஹனம் என்ற தெலுங்கு படத்தில் கதையின் நாயகியாகவும் நடித்தார் அதிதிராவ்.

இந்த படம் அவருக்கு வெற்றியை கொடுத்ததோடு அதிகப்படியான ரசிகர்களையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்தநிலையில், நாளிதழ் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில், கடந்த ஆண்டில் அதிகமான ரசிகர்கள் விரும்பிய பெண் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் அதிதிராவ். கடந்த சில ஆண்டுகளாகவே முதலிடம் பிடித்து வந்த சமந்தா இந்த ஆண்டு மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

மூலக்கதை