தேசிய விருது இயக்குனருடன் திலீப்பிற்கு என்ன பிரச்சனை ?

தினமலர்  தினமலர்
தேசிய விருது இயக்குனருடன் திலீப்பிற்கு என்ன பிரச்சனை ?

பிரபல ஒளிப்பதிவாளரும், 'அன்னயும் ரசூலும், கம்மட்டிப்பாடம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய, தேசிய விருது பெற்றவருமான இயக்குனர் தான் ராஜீவ் ரவி. நளதமயந்தி படத்தில் நடித்த நடிகை கீது மோகன்தாஸின் கணவரும் கூட. இவருக்கும் நடிகர் திலீப்புக்கும் கடந்த பல ஆண்டுகளாக பனிப்போர் நிலவி வருகிறது. இதன் காரணத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் உடைத்துள்ளார் பிரபல இயக்குனர் லால் ஜோஸ்.

திலீப்பை வைத்து நிறைய ஹிட் படங்களை கொடுத்தவர் லால்ஜோஸ்.. அதேபோல், லால்ஜோஸின் பல படங்களில் ராஜீவ் ரவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். அப்படி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு லால் ஜோஸ் இயக்கத்தில் திலீப் நடித்த ரசிகன் என்கிற படத்திற்கு ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்திருந்தார். படம் சரியாக போகவில்லை. ஆனால் படத்தின் தோல்விக்கு ராஜீவ் ரவியின் இருட்டு கலந்த ஒளிப்பதிவு தான் காரணம் என படத்தின் தயாரிப்பாளர் நினைத்தார். அதனால் அடுத்ததாக திலீப்பை வைத்து லால்ஜோஸ் இயக்கிய சாந்துப்பொட்டு படத்திற்கு ராஜீவ் ரவிக்கு பதிலாக அழகப்பன் என்கிற ஒளிப்பதிவாளரை நியமித்தார் படத்தின் தயாரிப்பாளர்.

ஆனால் இதற்கு திலீப் தான் காரணம் என ராஜீவ் ரவி நினைக்க ஆரம்பித்தாராம். இது ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க, ராஜீவ் ரவியின் திறமையை மற்றவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என நினைத்த இயக்குனர் லால்ஜோஸ், தான் அடுத்ததாக இயக்கிய கிளாஸ்மேட்ஸ் படத்தில் அவரையே ஒளிப்பதிவாளராக பணியாற்ற செய்தார்.. அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.. ஆனாலும் இன்று வரை திலீப்புக்கும் ராஜீவ் ரவிக்குமான பனிப்போர் முடிவுக்கு வரவில்லை என்று கூறியுள்ளார் இயக்குனர் லால்ஜோஸ்.

மூலக்கதை