பேத்தி உடன் மம்முட்டி : வைரலான புகைப்படம்

தினமலர்  தினமலர்
பேத்தி உடன் மம்முட்டி : வைரலான புகைப்படம்

மம்முட்டியின் மகன் நடிகர் துல்கர் சல்மான், மலையாளம், தமிழ், ஹிந்தி என பரபரப்பான ஹீரோவாக வலம் வருகிறார். கடந்த 2 வருடத்திற்கு முன்பு பெண் குழந்தைக்குத் தந்தையான இவர், அதற்கு மரியம் என பெயர் சூட்டினார். துல்கர் சல்மான், அவரது மனைவி அமல் சுபியா இருவரும் தங்களது குழந்தை மரியமுடன் இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகின.

தற்போது, முதல்முறையாக தாத்தா மம்முட்டியின் மடியில் பேத்தி மரியம் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மம்முட்டி, தனது பேத்தியையும் அழைத்துச் சென்று கலந்து கொண்டபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை