விஜய் 63 சாட்டிலைட் உரிமம் விற்பனை

PARIS TAMIL  PARIS TAMIL
விஜய் 63 சாட்டிலைட் உரிமம் விற்பனை

 சர்கார் படத்தை தொடர்ந்து விஜய், அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 63வது படமாக உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, கதிர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரஹ்மான் இசை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 
விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விஜய், விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இதன் சாட்டிலைட் உரிமம் விற்பனையாகி உள்ளது. சர்கார் படத்தை தயாரித்த நிறுவனம், விஜய் 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றி இருக்கிறது. 

மூலக்கதை