அரசியலுக்கு ‘நோ’ * பி.சி.சி.ஐ., தடை | மார்ச் 19, 2019

தினமலர்  தினமலர்
அரசியலுக்கு ‘நோ’ * பி.சி.சி.ஐ., தடை | மார்ச் 19, 2019

 புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில் அரசியல் விளம்பரங்கள் ஒளிபரப்ப இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அனுமதி மறுத்துள்ளது.

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 12வது சீசன் வரும் 23ம் தேதி துவங்கவுள்ளது. முதல் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ சென்னை, பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இத்தொடரை நேரடி ஒளிபரப்பு செய்ய ஸ்டார் நிறுவனம் ரூ. 16,347.50 கோடி(5 ஆண்டுகள்) பி.சி.சி.ஐ.,க்கு கொடுக்கிறது.

12வது சீசன் நடக்கவுள்ள ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடக்கவுள்ளது. இதனால் போட்டி இடைவேளை நேரங்களில் அரசியல் சார்ந்த விளம்பரங்களை ஒளிபரப்ப ஸ்டார் நிறுவனம் அனுமதி கேட்டது.

இதை ஏற்க பி.சி.சி.ஐ., மறுத்து விட்டது. இது தொடர்பான மீடியா ஒப்பந்தத்தின் படி, அரசியல், மத ரீதியிலான விளம்பரங்களுக்கு அனுமதி இல்லை என தெளிவாக உள்ளது. தவிர அரசியல், விளையாட்டு இரண்டையும் கலக்கக் கூடாது என்பதில் பி.சி.சி.ஐ., உறுதியாக உள்ளதால், ஸ்டார் நிறுவனத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை.

மூலக்கதை