மரபுக்கு மாறாக சிறுவனுக்கு வீர தீர செயல் விருது

தினமலர்  தினமலர்
மரபுக்கு மாறாக சிறுவனுக்கு வீர தீர செயல் விருது

புதுடில்லி: முப்படைகள் மற்றும் துணை ராணுவப் படையைச் சேர்ந்தவர்களுக்கு, வீர தீர செயலுக்கான விருதுகளை, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் நேற்று வழங்கினார். தன் வீட்டுக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதியை அடித்து விரட்டிய, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த, 16 வயது சிறுவன் இர்பான் ரம்ஜான் ஷேக்குக்கு, ராணுவத்தினருக்கு வழங்கப்படும் வீர தீர விருது வழங்கப்பட்டது.

உயரிய விருது:


இந்த விருதுகளை, ஜனாதிபதி மாளிகையில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். ஜம்மு - காஷ்மீர் மாநிலம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் உயிரிழந்த இருவருக்கு, 'கீர்த்தி சக்ரா' விருதும், இருவருக்கு, 'சவுர்யா சக்ரா' விருதும், அவர்களது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. 'அசோக் சக்ரா'வுக்குப் பின், ராணுவத்தினருக்கு வழங்கப்படும் மிகவும் உயரிய விருதுகள் இவை.

மரபுக்கு மாறாக விருது:


ஜம்மு - காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில், 'ஆர்மர்டு கார்ப்ஸ்' பிரிவின் வீரர் விஜய் குமார், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கான்ஸ்டபிள், பிரதீப் குமார் பாண்டா உயிரிழந்தனர். இந்த இருவருக்கும், கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது. மணிப்பூரில் நடந்த நடவடிக்கையில் உயிரிழந்த, ராணுவத்தின் ரைபிள்பேன் ஜெயபிரகாஷ் ஓரான், ஜம்மு - காஷ்மீரில் உயிர் இழந்த ராணுவ வீரர் அஜய் குமாருக்கு, மூன்றாவது உயரிய விருதான, சவுர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது.

மூலக்கதை