வங்கதேசத்தில் அவாமி லீக் தலைவர் சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்
வங்கதேசத்தில் அவாமி லீக் தலைவர் சுட்டுக்கொலை

தாகா: வங்கசேதத்தில் படகில் சென்ற அவாமி லீக் கட்சி தலைவரை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள ரங்கமதி மாவட்டத்தின்  அலிகோங்க் பகுதியில் அந்த கட்சியை சேர்ந்த உள்ளூர் தலைவர் சுரேஷ் கந்தி தான்சாங்கியா என்பவர் தனது குடும்பதினருடன் பிலாச்சேரி பகுதிக்கு படகில் சென்று கொண்டிருந்தார். நேற்று காலை 9.30 மணியளவில் அவரது படகை திடீரென வழிமறித்த மர்மநபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால், சுரேஷ் கந்தி தான்சாங்கியாவை அவரது குடும்பத்தினர் கண் முன்னே சுட்டுக்கொலை செய்தனர். இதில் சுரேஷ் கந்தியின் குடும்பத்தினர் மற்றும் பழங்குடி மனிதர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதேபோல், நேற்று முன்தினம் தேர்தல் முடிந்ததும் வாக்குப்பெட்டிகளை எடுத்து வந்த 2 ஜீப்களை வழிமறித்த கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் தேர்தல் அலுவலர்கள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் கட்சி தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை