ரியல் எஸ்டேட் துறைக்கு புதிய ஜிஎஸ்டி வரி விகிதம்

தினகரன்  தினகரன்
ரியல் எஸ்டேட் துறைக்கு புதிய ஜிஎஸ்டி வரி விகிதம்

புதுடெல்லி: ரியல் எஸ்டேட் துறையில் வீடுகள் கட்டுமானத்தில் ஒரு நிலையிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றும் திட்டத்திற்கான குறைந்த  புதிய வரி விகிதத்திற்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வருவாய் துறை செயலாளர் ஏ.பி. பாண்டே தெரிவித்துள்ளார். மாநிலங்களுடன் ரியல் எஸ்டேட் புரோமோட்டர்கள் குடியிருப்புகள் கட்டுவது தொடர்பாக விவாதித்து மாற்றுத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ுரிய கால அவகாசம் தரப்பட்டுள்ளது.ஜிஎஸ்டி கவுன்சிலின் முந்தைய கூட்டம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்டுமானத்தில் உள்ள குடியிருப்பு திட்டங்களுக்கு 1 சதவீதம் வரி சலுகை அளிக்கப்பட்டது.  மற்ற பிரிவுகளுக்கு வரி விதிப்பு 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இது ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மூலக்கதை