பரிஸ் வன்முறையின் எதிரொலி! - காவல்துறை தலைமை அதிகாரி மாற்றம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ் வன்முறையின் எதிரொலி!  காவல்துறை தலைமை அதிகாரி மாற்றம்!!

பரிஸ் மாநகர காவல்துறை தலைமை அதிகாரி மாற்றப்பட்டு, Didier Lallement எனும் புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். 
 
இன்று புதன்கிழமை அமைச்சர்களின் சபை இந்த புதிய அதிகாரியை தேர்ந்தெடுத்துள்ளது. பரிசில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கட்டுக்கடங்காத வன்முறைச் சம்பவத்தை தொடர்ந்தே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக பதவி வகித்த Michel Delpuech, பதவி விலக்கப்பட்டு Didier Lallement, புதிய காவல்துறை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 
 
62 வயதுடைய இவர் உள்துறை அமைச்சரின் முன்னாள் பொது செயலாளராக பணிபுரிந்திருந்தார். தவிர அமைச்சரவையில் பல்வேறு துறைகளின் கீழ் பணிபுரிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை