சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி மதிப்பெண் பட்டியலும் சான்றிதழும் ஒன்றாக்கப்படும்

தினகரன்  தினகரன்
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி மதிப்பெண் பட்டியலும் சான்றிதழும் ஒன்றாக்கப்படும்

புதுடெல்லி: நடப்பு கல்வி ஆண்டு முதல் 10ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலும் சான்றிதழும் இணைத்து ஒற்றை ஆவணம் வழங்கப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ மூத்த அதிகாரி கூறியதாவது: இந்த கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண், சான்றிதழ் உள்ளடக்கிய ஒற்றை ஆவணம் அளிக்கப்பட உள்ளது. இதனையே சான்றிதழாகவும் பயன்படுத்தலாம். நகல் தேவைப்பட்டால் சிபிஎஸ்இ அறிவுறுத்திய சான்று சமர்ப்பித்து பெற்று கொள்ளலாம். பிளஸ்2 மாணவர்களுக்கு வழக்கம்போல், மதிப்பெண்கள் பட்டியல், சான்றிதழ் தனித்தனியே வழங்கப்படுவது தொடரும். மறுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு அந்த பாடத்தில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் தனியாக வழங்கப்படாது. மதிப்பெண் பட்டியல் மட்டுமே வழங்கப்படும். 2020 கல்வியாண்டு முதல், இட ஒதுக்கீட்டு பிரிவில் வரும் மாணவர்கள், 3 முறை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தேர்ச்சி பெறாவிட்டால் அடுத்த ஆண்டு மட்டுமே அவர்கள் தேர்வு எழுத முடியும். முந்தைய தேர்வில் பெற்ற செய்முறை பயிற்சி மதிப்பெண்கள் அடுத்த தேர்வில் சேர்க்கப்படும். இந்த துணை விதிகளை சேர்க்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது’’ என்றும் அவர் தெரிவித்தார்.

மூலக்கதை