எதிர்பார்ப்பு!மதுரை-ராமேஸ்வரத்திற்கு கூடுதல் ரயில்களை இயக்க...விடுமுறையால் பயணிகள் எண்ணி்க்கை அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
எதிர்பார்ப்பு!மதுரைராமேஸ்வரத்திற்கு கூடுதல் ரயில்களை இயக்க...விடுமுறையால் பயணிகள் எண்ணி்க்கை அதிகரிப்பு

மதுரை:நெரிசலை தவிர்க்க மதுரை - ராமேஸ்வரம் இடையே கூடுதல் ரயில்களை இயக்க கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.கோடை விடுமுறை துவங்கவுள்ளதையடுத்து ராமேஸ்வரம் செல்லும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெரும்பாலான பயணிகள் மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு ரயில்களில் பயணிப்பதை விரும்புகின்றனர். தற்போது மதுரையிலிருந்து காலை 6:50 மணி, பகல் 12:40 மணி, மாலை 6:10 மணிக்கு ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் புறப்படுகின்றன.ராமேஸ்வரத்திலிருந்து அதிகாலை 5:25 மணி, பகல் 11:20 மணி, மாலை 6:05 மணிக்கு மதுரைக்கு ரயில்கள் புறப்படுகின்றன. இந்த ரயில்களில் பயணிகள் நெரிசல் அதிகம் உள்ளன.
பயணிகள் கூறியதாவது: அரசு பஸ்களுடன் ஒப்பிடுகையில் ரயில்களில் பயண கட்டணம் குறைவு. மேலும் ரயில்களில் சவுரியமாக பயணிக்கவும் வசதியுள்ளது. மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது மதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு திருப்பதி, கோவையிலிருந்து ரயில்கள் இயக்கப்பட்டன. அகல பாதை அமைக்கும் பணியால் இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன. தற்போது அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகும் ரத்தான ரயில்கள் இயக்கப்படவில்லை. பயணிகள் நலன் கருதி கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்றனர்.

மூலக்கதை