கடலூர் லோக்சபா தொகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள் அதிருப்தி!

தினமலர்  தினமலர்
கடலூர் லோக்சபா தொகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள் அதிருப்தி!

கடலுார்:நீண்ட இடைவெளிக்கு பிறகு, கடந்த 2014ம் ஆண்டு நடந்தகடலுார் லோக்சபா தேர்தலில்,அ.தி.மு.க.,அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றும், கூட்டணி கட்சிக்கு சீட் ஒதுக்கியதுஅ.தி.மு.க.,வினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கடலுார் லோக்சபா தொகுதியில், 1951ம் ஆண்டிலிருந்து, 2014ம் ஆண்டு வரை நடந்த 16 லோக்சபாதேர்தலில், தி.மு.க., -காங்.,- அ.தி.மு.க.,என மாறி, மாறி வெற்றி பெற்றன.
அதிகபட்சமாக காங்.,8 முறையும், தி.மு.க.,நான்கு முறையும், அ.தி.மு.க., இரண்டு முறையும், த.மா.கா மற்றும் சுயேச்சை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.இதில் பல ஆண்டுகளுக்கு பிறகு கடலுாரில், கடந்த 1998 ல் நடந்த தேர்தலில், எம்.சி.தாமோதரன் முதன்முறையாக அ.தி.மு.க.,சார்பில் வெற்றி பெற்றார். பிறகு 1999 மற்றும் 2004ல் நடந்த தேர்தலில் தி.மு.க.,வும், அதன் பிறகு கடந்த 2009ல் நடந்ததேர்தலில் தற்போது மாநில காங்.,தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரி வெற்றி பெற்றார்.
இதற்கிடையில் கடந்த மூன்று முறை நடந்த லோக் சபா தேர்தலில் கடலுாரில் அ.தி.மு.க.,விற்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்து. 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2014ல் நடந்தலோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,சார்பில் போட்டியிட்ட அருண்மொழித்தேவன், தி.மு.க.,வேட்பாளரை விடஇரண்டு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.கடந்த முறை நடந்த லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்ட அ.தி.முக., அதிக ஓட்டு வித்தியாசத்தில்வெற்றி பெற்றதால், மீண்டும் கடலுார் லோக்சபா தொகுதி அ.தி.மு.க.,விற்கு ஒதுக்கப்படும் என்றுஅ.தி.மு.க.,நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடலுார் தொகுதி பா.ம.க.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் தி.மு.க.,வேட்பாளராக பண்ருட்டி தொகுதியை சேர்ந்ததொழிலதிபர் ரமேஷ் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவரை எதிர்த்து ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,போட்டியிட்டால்தான்,சரியாக இருக்கும். ஆனால் பா.ம.க., வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதால், தி.மு.க.,வேட்பாளருக்கு ஈடு கொடுப்பதற்கு கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
லோக்சபா தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பாக தி.மு.க.,மீது பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ்கடுமையான விமர்சனம் வைத்திருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில், பா.ம.க.,போட்டியிடும் 7 தொகுதியில்,6ல் தி.மு.க., நேரடியாக மோதுகிறது. இதில் கடலுார் தொகுதியும் ஒன்று.கடலுார் லோக்சபா தொகுதியிலுள்ள 6 சட்டசபை தொகுதியில், கடலுார், பண்ருட்டி, விருத்தாச்சலம்ஆகியன அ.தி.மு.க.,வசம் உள்ளது.
விருத்தாச்சலம் தொகுதி எம்.எல்.ஏ.,கலைச்செல்வன் தினகரன் அணியில் உள்ளார். இதேபோல் குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, நெய்வேலி ஆகிய தொகுதிகள் தி.மு.க.,வசம் உள்ளன.இச்சூழ்நிலையில், பா.ம.க., வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினகரன் அணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர், அ.தி.மு.க.,கூட்டணிக்கு செல்ல வேண்டிய ஓட்டுக்களை பிரிப்பார் என்பதால் தி.மு.க.,அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும்
.அ.தி.மு.க.,விற்கு சாதகமான கடலுார் லோக்சபா தொகுதி, கோஷ்டிபூசல் காரணமாக, அ.தி.மு.க.,தலைமை, கூட்டணி கட்சியான பா.ம.க.,விற்கு ஒதுக்கிவிட்டது என்று அ.தி.மு.க.,தொண்டர்கள்மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.கடலுார் தொகுதியில் முதன் முறையாக பா.ம.க.,போட்டியிடுவது, அந்த கட்சியின் தொண்டர்கள்மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், இரண்டு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியை, கூட்டணி கட்சிக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளது,
அ.தி.மு.க.,வின் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.இங்கேயும் கோஷ்டி பூசல்கடலுார் மாவட்டத்தில், கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு கோஷ்டியும், மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகிறது.
தி.மு.க., விலும் கோஷ்டி பூசல் வெட்ட வெளிச்சமாக உள்ளதால், இரண்டு கோஷ்டிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான், தி.மு.க.,வேட்பாளருக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும்.வேல்முருகன் ஆதரவுதமிழக வாழ்வு உரிமை கட்சி தலைவர் வேல்முருகன், திடீரென தி.மு.க.,தலைவர் ஸ்டாலினை சந்தித்து, தி.மு.க.,கூட்டணிக்கு ஆதரவு தருவதாக கூறியிருப்பது, கடலுார் மாவட்ட தி.மு.க.,வினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மாவட்டத்தில் வேல்முருகனுக்கு பரவலாக ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.தி.மு.க.,விலும் கோஷ்டி பூசல்கடலுார் மாவட்டத்தில், கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு கோஷ்டியும், மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகிறது. தி.மு.க.,விலும் கோஷ்டி பூசல் வெட்ட வெளிச்சமாக உள்ளதால், இரண்டு கோஷ்டிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான், தி.மு.க.,வேட்பாளருக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும்.

மூலக்கதை