ஆர்ஆர்ஆர் ஹிந்தி உரிமை, அதற்குள் கடும் போட்டி

தினமலர்  தினமலர்
ஆர்ஆர்ஆர் ஹிந்தி உரிமை, அதற்குள் கடும் போட்டி

'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் ஒரு ஹிந்தித் திரைப்படம் படைக்காத வசூல் சாதனையை ஒரு மாநில மொழிப் படம் சாதித்தது. அதற்குப் பிறகு ஹிந்தியில் நேரடியாக சில சரித்திரப் படங்கள் வெளிவந்தும் அவற்றால் 'பாகுபலி' வசூலை முறியடிக்க முடியவில்லை.

'பாகுபலி' இயக்குனர் ராஜமவுலி அடுத்து இயக்கி வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் தெலுங்கு நடிகர்களான ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோருடன் ஹிந்தி நடிகரான அஜய் தேவகன் முக்கிய கதாபாத்திரத்திலும், ஹிந்தி நடிகையான ஆலியா பட் ஒரு நாயகியாகவும் நடிக்க உள்ளார்கள்.

அது பற்றிய அறிவிப்பு கடந்த வாரம்தான் வெளியானது. ஆனால், அதற்குள்ளாக 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஹிந்தி உரிமையை வாங்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம்.

'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களையும் பிரபல இயக்குனரான கரண் ஜோஹர் தான் வாங்கி வெளியிட்டார். தற்போதும் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்காக அவர்தான் அஜய் தேவகன், ஆலியா பட் ஆகியோரின் தேதிகளை வாங்கிக் கொடுத்தாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும் ரிலயன்ஸ் நிறுவனம் ஒரு பெரும் தொகைக்கு படத்தை வாங்கத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. ஆனாலும், கரண் ஜோஹர் இல்லாமல் அந்த உரிமை ராஜமவுலி கொடுக்க மாட்டார், வேண்டுமென்றால் ஒரு பார்ட்னர்க ரிலயன்ஸ் நிறுவத்தை அவர் சேர்த்துக் கொள்வார் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை