பட்டாசு தொழிற்சாலையில் தீ – இருவர் காயம்

TAMIL CNN  TAMIL CNN
பட்டாசு தொழிற்சாலையில் தீ – இருவர் காயம்

நீர்கொழும்பு கட்டான – கிம்புலபிட்டி பகுதியில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் The post பட்டாசு தொழிற்சாலையில் தீ – இருவர் காயம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை