3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு ‘சந்திரசேகர ராவ் கிரிமினல் பாலிடிக்ஸ் செய்கிறார்’: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு ‘சந்திரசேகர ராவ் கிரிமினல் பாலிடிக்ஸ் செய்கிறார்’: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

அமராவதி: தெலுங்கு தேசம் கட்சி சார்பில், மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ‘தெலங்கானா முதல்வர்  சந்திரசேகர ராவ் கிரிமினல் பாலிடிக்ஸ் செய்கிறார்’ என்று குற்றம்சாட்டினார். கடந்த சில நாட்களுக்கு முன், தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் தெலுங்கு தேசம்  கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, முதற்கட்டமாக 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார்.   எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று கடப்பா மாவட்டம், புலிவெந்துலாவில் உள்ள முன்னாள் முதல்வர்  ராஜசேகரரெட்டியின் நினைவிடத்தில் 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.

இதில், கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவில் ஜெகன்மோகன் ரெட்டி போட்டியிடுகிறார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து குப்பம் தொகுதியில்  சந்திரமவுலி போட்டியிடுகிறார்.

நகரி தொகுதியில் நடிகை ரோஜா மீண்டும் போட்டியிடுகிறார். இதேபோல, பாஜவும் 125 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வேட்பாளர்  பட்டியலை நேற்று வெளியிட்டது.

இதே போல, 60 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட அருணாச்சல பிரதேசத்தில் பாஜ நேற்று 54 தொகுதிகளுக்கான முதல்கட்ட  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில், இன்று காலை தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, வரும் ஏப்ரல் 11ம் தேதி நடக்கும்  வாக்குப்பதிவுக்கான 3ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வௌியிட்டார். அதில், 36 சட்டசபை தொகுதிக்கும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.   முன்னதாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், ‘தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கிரிமினல் பாலிடிக்ஸ் செய்கிறார்.

காங்கிரஸ் மற்றும்  தெலுங்கு தேசம் கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி வருகிறார்.

பீகாரை சேர்ந்த பிரசாந் கிஷோர், ஆந்திராவில் லட்சக்கணக்கான  வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார்’ என்றார்.

.

மூலக்கதை