குழந்தை இயேசுவின் கண்களில் இருந்த வழிந்த இரத்தம்!

PARIS TAMIL  PARIS TAMIL
குழந்தை இயேசுவின் கண்களில் இருந்த வழிந்த இரத்தம்!

மெக்சிகோவில் தேவாலயம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குழந்தை இயேசு சுரூபத்தின் கண்களில் இருந்து 4வது முறையாக ரத்த கண்ணீர் வழிவதை பார்த்து ஊர்மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

 
மெக்சிகோவின் அகாபுல்கோ பகுதியில் இருந்து 42 கிமீ தூரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில், தான் இந்த அதிசயம் நடந்துள்ளது.
 
அங்கு இருக்கும் குழந்தை இயேசு சுரூபத்தின் கண்களில் இருந்து திடீரென ரத்தம் வழிந்துள்ளது.
 
இதனை பார்த்த பொதுமக்கள் பலரும், கடவுள் ஏதோ ஒரு செய்தி கூற வருகிறார் என தெரிவிக்கின்றனர். மற்ற சிலர் இது சாத்தானின் சதிச்செயல் என கூறுகின்றனர்.
 
முன்னதாக புத்தான்டு தினத்தில் இதே சுரூபத்தின் கண்களில் இருந்து ரத்தம் வழிந்தது. ஒரு வருடத்தில் அடுத்தடுத்து 4 முறை இந்த சம்பவம் நடந்திருப்பதால், ஊர் மக்களுக்கு ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.
 
பொது பாதுகாப்பு மற்றும் குற்றவியல் நீதி குடிமக்கள் அறிக்கைபடி ஒவ்வொரு 100,000 மக்களில் ஒருநாளைக்கு 111 பேர் கொலை செய்யப்படுகிறார்கள். இதனால் கடவுள் வேதனைப்படுவதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
 
இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தம்புவோவில் ஒரு பெயரிடப்படாத பாதிரியார் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், எல்லாமே ஆன்மீக நிகழ்வுகளாக இருக்காது எனவும் கூறியுள்ளார்.
 
ஆனால் உள்ளுரை சேர்ந்த மக்கள் சோதனைக்காக அந்த சுரூபத்தை எடுத்து செல்ல மறுப்பு தெரிவிக்கின்றனர். அதனை அங்கிருந்து அகற்றினால் எதுவும் அசம்பாவிதம் நடத்துவிடமோ என அஞ்சுகின்றனர்.
 
 

மூலக்கதை