உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானை புறக்கணிக்கலாம்!

PARIS TAMIL  PARIS TAMIL
உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானை புறக்கணிக்கலாம்!

உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணியைப் புறக்கணித்து 2 புள்ளிகளை இழப்பதில் தவறில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
 
அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியை இந்தியா புறக்கணித்தால், ஒட்டுமொத்த மக்களும் அதற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
 
புல்வாமா தாக்குதலையடுத்து உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என்ற கோரிக்கை வலுத்தது. இந்திய கிரிக்கெட் வாரியமும், வீரர்களும் இந்திய அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று தெரிவித்தனர்.
 
இதுகுறித்து கம்பிர் கூறுகையில் ‘‘பாகிஸ்தானுக்கு எதிராக நிபந்தனையற்ற தடை விதிக்க முடியாது என்பதை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இதுகுறித்து பி.சி.சி.ஐ. முடிவு எடுக்க வேண்டியது அவசியம்.
 
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கிண்ண போட்டியை புறக்கணிப்பது கடினம் என்பது என்னால் உறுதியாகக் கூறமுடியும். ஆனால், நாம் பாகிஸ்தானுக்கு எதிராக இரு நாடுகளுக்கும் இடையிலான தொடரில் விளையாடுவதில்லை. அதேபோல் ஆசிய கோப்பையிலும் விளையாடாமல் இருக்க முடியும். இது சிறந்த முடிவாகும்.
 
இதேவேளை, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடாமல் இரண்டு புள்ளிகளை இழப்பதில் எந்த தவறும் இல்லை. 40 உயிர்களை இழந்திருப்பது மிகவும் முக்கியமானது.
 
என்னுடைய பார்வையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடாது என்று முடிவு எடுத்துவிட்டால், ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதவேண்டும் என்றாலும், அதைப் புறக்கணிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மூலக்கதை