பொருளாதாரத்தை 8.5 சதவீதமாக உயர்த்தணும்; கட்சிகளுக்கு 'அசோசெம்' கோரிக்கை

தினமலர்  தினமலர்
பொருளாதாரத்தை 8.5 சதவீதமாக உயர்த்தணும்; கட்சிகளுக்கு அசோசெம் கோரிக்கை

புதுடில்லி: 'நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, 8.5 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுப்போம் என, அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்க வேண்டும்' என, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பான, 'அசோசெம்' வலியுறுத்தியுள்ளது.

கல்வி செலவு:


மாணவர்களின் கல்விச் செலவை குறைக்க, வெளியில் இருந்து பெறப்படும் கல்விச் சேவைகளுக்கான, ஜி.எஸ்.டி., தற்போதைய, 18 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். தொழில் துறை வளர்ச்சிக்கு, வங்கி சாராத நிதியங்களை ஏற்படுத்த வேண்டும். இதனால், தொழிலகங்கள், குறைந்த வட்டியில் விரைவாக கடன் பெறலாம்.

வாடகை வருவாய்:


வீடு வாடகை வருவாய்க்கு, 10 சதவீதம் என, ஒரே வரி விகிதம் நிர்ணயிக்க வேண்டும். வாடகை வாயிலான வருவாய் விகிதத்தை உயர்த்த, அதற்கான வருமான வரிக் கழிவை, 30 சதவீதத்தில் இருந்து, 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். மூன்று ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட பங்கு முதலீடுகளுக்கு, நீண்ட கால மூலதன ஆதாய வரியில் விலக்கு அளிக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியை, அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கையில் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை