டாஸ்மாக் கடையில் மதுபான விற்பனைக்கு கட்டுப்பாடு!

தினமலர்  தினமலர்
டாஸ்மாக் கடையில் மதுபான விற்பனைக்கு கட்டுப்பாடு!

விருத்தாசலம்: கடலுார் மாவட்டத்தில், லோக்சபா தேர்லை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்., 18ம் தேதி, நடக்கிறது. இதற்காக, இந்திய தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, தேர்தல் விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக 'சி விஜில்' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று, தேர்தல் பணியில் ஈடுபடும் கட்சித் தொண்டர்களுக்கு மதுபாட்டில்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் கடைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி, கடலுார் மாவட்டத்தில் இயங்கும் 141 டாஸ்மாக் கடைகளில் மதுபான வகைகளை மொத்தமாக விற்பனை செய்யக் கூடாது. மதுபானங்களுக்கான விற்பனை பில் மொத்தமாக போடக் கூடாது.
இருப்பு மற்றும் விற்பனை பதிவேடுகளை தினசரி பராமரிக்க வேண்டும். டோக்கன்கள் மற்றும் கூப்பன்கள் அடிப்படையில் மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது.கடந்த மாதத்தின் சராசரி விற்பனையை விட 30 சதவீதத்திற்கு மேல் நடப்பு மாதத்தில் தினசரி விற்பனை நடந்தால், முறைகேடுகள் ஏற்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணித்து, விற்பனை அதிகரிக்கும் பட்சத்தில், அதற்கான காரணத்தை மேற்பார்வையாளர்கள் எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும். இதனை பின்பற்றாத பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என அறிவுறுத்தப்பட் டுள்ளது.

மூலக்கதை