பரிஸ் - திரையரங்கில் அசிட் எரிவுக்குள் சிக்கிய பெண்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ்  திரையரங்கில் அசிட் எரிவுக்குள் சிக்கிய பெண்!!

பரிசில் உள்ள சினிமா திரையரங்கம் ஒன்றுக்குள், பெண் ஒருவர் அசிட் எரிவுக்குள் சிக்கிக்கொண்டுள்ளார். காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 
 
பரிஸ் மூன்றாம் வட்டாரத்தின் rue Rambuteau வீதியில் உள்ள MK2  திரையரங்கில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காலை 9:50 மணிக்கு திரையரங்கின் இருக்கை ஒன்றில் வந்து அமர்ந்த குறித்த பெண் ஒருவர் மிக தீவிரமாக எரிவு ஒன்றுக்கு ஆளானார். உடனடியாக திரையரங்க ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு படையினரும் அழைக்கப்பட்டனர். 
 
குறித்த பெண்ணுக்கு பின் பக்கத்தில் இலேசான எரிவு காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர், பரிசோதனைகளுக்காக அசிட் மாதிரிகளை எடுத்துள்ளனர். 
 
கடந்த  பெப்ரவரி 13 ஆம் திகதி, 11 ஆம் இலக்க மெற்றோவில் இளம் பெண் ஒருவர் இதேபோன்ற அசிட் எரிவுக்குள் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை