ஐஎஸ்எல் கால்பந்து முதன் முறையாக பெங்களூரு சாம்பியன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐஎஸ்எல் கால்பந்து முதன் முறையாக பெங்களூரு சாம்பியன்

மும்பை: மும்பையில் நேற்று நடந்த ஐஎஸ்எல் கால்பந்து இறுதிப்போட்டியில் பெங்களூரு எப். சி அணி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை  படைத்தது. நேற்று நடந்த போட்டியில் எப். சி கோவா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வீழ்த்தியது.

5வது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல். )  கால்பந்து தொடரில் 10 அணிகள் மோதின.   இதில் இறுதிப்போட்டிக்கு பெங்களூரு எப். சி அணி மற்றும் எப். சி கோவா அணி தகுதி பெற்றது. நேற்று இரவு  மும்பையில் இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப் போட்டி நடந்தது.

இரு அணிகளின் வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடியும் ஆட்ட நேரம் முடிவு வரை கோல்  ஏதும் விழவில்லை. ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில் பெங்களூரு வீரர் மிகு அடித்த பந்து, கம்பத்தில் பட்டு திரும்பியது.



இதையடுத்து கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் கோவா வீரர் அகமது ஜாஹோ 2வது முறையாக மஞ்சள் அட்டை பெற்றதால்  வெளியேற்றப்பட்டார்.

இதனால் கோவா அணி 10 வீரர்களுடன் மட்டுமே ஆடியது. இதனை பயன்படுத்ிக் கொண்ட பெங்களூரு அணியின் முன்கள வீரர்கள்  ஆக்ரோஷமான தாக்குதலில் ஈடுபட்டனர்.

116வது நிமிடத்தில் கார்னர் ஷாட்டில் வந்த பந்தை பெங்களூரு வீரர் ராகுல் பெகே தலையால் முட்டி, அற்புதமாக கோல்  அடித்தார். அதன் பின்னர் பெங்களூரு வீரர்கள் தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட்டதால், கோவா வீரர்களால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை.

பெங்களூரு அணி 1-0  என்ற கோல் கணக்கில் வென்று முதல்முறையாக ஐஎஸ்எல் கோப்பையை கைப்பற்றியது.

.

மூலக்கதை