‘மாருதி சுசூகி’ நிறுவனம் வாகன உற்பத்தி குறைப்பு

தினமலர்  தினமலர்
‘மாருதி சுசூகி’ நிறுவனம் வாகன உற்பத்தி குறைப்பு

புதுடில்லி: ‘மாருதி சுசூகி இந்தியா’ நிறுவனம், கடந்த பிப்ரவரியில் வாகன உற்பத்தியை, 8 சதவீதத்திற்கும் அதிகமாக குறைத்துள்ளது.

வாகனங்களுக்கான தேவைப்பாடு குறைந்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.இந்தாண்டு, பிப்ரவரியில், மாருதி, 1 லட்சத்து, 48 ஆயிரத்து, 959 வாகனங்களை தயாரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில் தயாரிக்கப்பட்ட, 1 லட்சத்து, 62 ஆயிரத்து, 524 வாகனங்களை விட, 8.3 சதவீதம் குறைவு. மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் கூர்கான், மானேசர் தொழிற்சாலைகள், ஆண்டுக்கு, 15.5 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டவை.

இது தவிர, சுசூகி நிறுவனத்தின், குஜராத் மாநிலம், ஹன்சல்புரில் உள்ள தொழிற்சாலையின் முதல் பிரிவு, ஆண்டுக்கு, 2.5 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் திறனுடன் விளங்குகிறது. இரண்டாவது பிரிவு செயல்பட துவங்கிய போதிலும், இன்னும் வாகன தயாரிப்பு, ஆண்டுக்கு, 2.5 லட்சம் என்ற அளவை எட்டவில்லை.உருவாக்கத்தில் உள்ள மூன்றாவது பிரிவும், ஆண்டுக்கு, இதே அளவிலான வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் உள்ளதாக இருக்கும்.

மூலக்கதை