‘ஸ்வைப்பிங்’ இயந்திரம் விற்பனை மாதம் சராசரியாக 50 ஆயிரம் உயர்வு

தினமலர்  தினமலர்
‘ஸ்வைப்பிங்’ இயந்திரம் விற்பனை மாதம் சராசரியாக 50 ஆயிரம் உயர்வு

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை அதிகரிக்கும் வகையில், மாதந்தோறும்சராசரியாக, 50 ஆயிரம், பி.ஓ.எஸ்., எனும், ஏ.டி.எம்., மற்றும் ‘கிரெடிட் கார்டு ஸ்வைப் பிங்’ இயந்திரங்கள், வங்கிகள் மூலமாக வழங்கப்படுகின்றன.

நாடு முழுவதும் ரொக்க பரிவர்த்தனை என்பது, குறைந்து வருகிறது. தற்போது சாமானியர்கள் கூட, ரொக்கப் பரிவர்த்தனையை குறைத்து, கார்டு மூலமாக பணம் செலுத்த துவங்கி உள்ளனர்.வங்கிகளும், ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்த, தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், ஏ.டி.எம்., கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்துடன் நில்லாமல், கடைகள், வணிக வளாகங்களில், ஏ.டி.எம்., கார்டு மற்றும் கிரெடிட் கார்டு வாயிலாக, பணம் செலுத்துவதற்கான, கார்டு ஸ்வைப்பிங் இயந்திரங்களும் அதிகளவில் வங்கிகளால் வழங்கப்பட்டு வருகின்றன. மாதந்தோறும், சராசரியாக, 50 ஆயிரம் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருவதாக, ரிசர்வ் வங்கியின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு நவம்பரில், 35.10 லட்சம்; டிசம்பரில், 35.95 லட்சம்;நடப்பாண்டு ஜனவரியில்,36.53 லட்சம் ஸ்வைப்பிங் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் ஒரு பிரிவே, பி.ஓ.எஸ்., வழங்குவது. இதன் வாயிலாக வணிகர்களின் வியாபாரம் அதிகமாகும். வங்கிகளுக்கு அவர்களின் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் வருவாயாக கிடைக்கும்.சிறிய பெட்டிக் கடைகளுக்கும் இந்த இயந்திரம் வழங்கலாம் என்பதால், தற்போது இயந்திரத்தின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

– நமது நிருபர் –

மூலக்கதை