ஆந்திர சட்டசபை தேர்தலில் ரோஜாவை எதிர்த்து வாணி விஸ்வநாத்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆந்திர சட்டசபை தேர்தலில் ரோஜாவை எதிர்த்து வாணி விஸ்வநாத்?

ஆந்திராவில் ஆட்சியை மீண்டும் தக்கவைக்க தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவும், ஆட்சியைப் பிடிக்க ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் தலைவர் ஒய். எஸ். ஜெகன்மோகன் ரெட்டியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடப்பாவில் உள்ள புலிவேந்துலா தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டி போட்டியிடுகிறார்.

நகரி தொகுதியில், தற்போது எம்எல்ஏவாக உள்ள நடிகை ரோஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் நடிகை ரோஜாவை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடிகை வாணி விஸ்வநாத் போட்டியிடுவார் என்று முதலில் கூறப்பட்டது.

அவர் போட்டியிடுவாரா என்பது குறித்து இப்போது எந்த தகவலும் இல்லை.

.

மூலக்கதை