‘இம்மாம் பெரிய முகம், தம்மாத்துண்டு ஆச்சு’சட்டீஸ்கர் சிஎம் லக, லக...

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘இம்மாம் பெரிய முகம், தம்மாத்துண்டு ஆச்சு’சட்டீஸ்கர் சிஎம் லக, லக...

சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் மக்களவை தேர்தல் குறித்து மீடியாவுக்கு அளித்த பேட்டியில், ‘எங்க மாநிலத்துல அல்ரெடி பாஜவை மக்கள் புறக்கணிச்சிட்டாங்க.

சட்டப்பேரவை தேர்தல் மாதிரி மக்களவை தேர்தல்லேயும் அவங்களுக்கு ஆப்பு ரெடியாகிட்டு இருக்கு. சட்டப்பேரவை தேர்தல் வரும் வரைக்கும் மோடி தான் பிரதானம்கிற மாதிரி சொல்லிட்டு இருந்தாங்க.

அவருடைய முகத்தை வச்சே நாங்க ஜெயிப்போம்னு அலப்பறை பண்ணினாங்க. அந்த சமயத்துல எங்க தலைவர் ராகுல் காந்தி, ரபேல் ஊழலை வெளியே கொண்டு வந்தப்போ, பிஜேபி தடுமாறிப்போயிடுச்சி.

அவங்க கட்சி போஸ்டர்கள்ல ராமன் சிங் போட்டோவை சின்னதா போட்டு, மோடி படத்தை பெரிசா அதுவரை வச்சிருந்தாங்க. ரபேல் ஊழல் பூதகரமான பிறகு ராமன் சிங் படம் பெரிசாகவும் மோடி, அமித்ஷா படம் சின்னதாகவும் போஸ்டர்கள்ல மாறிப்போச்சு.

அதுதான் இனியும் நடக்கப்போகுது’ என தடாலடியாக கூறியுள்ளார்.

.

மூலக்கதை